அடுத்த ரவுண்டுக்கு ரெடியா என ஸ்ரீதிவ்யா அதுவும் இரண்டு ஹீரோஸ் திரைப்படத்தில்.!

0
Sri-Divya
Sri-Divya

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அறிமுகமானார், இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் மனதையும் கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் கிராமத்து பெண்ணாகவே நடித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் திடீரென மாடலாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். மேலும் ஸ்ரீதிவ்யா கடைசியாக நடித்த திரைப்படம் சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படமாகும், அதன் பிறகு இவருக்கு இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப் பட வாய்ப்பும் அமையவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்த ஸ்ரீதிவ்யாவுக்கு தற்போது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, அல்லு சிரிஷ் நடிக்கிறார், இவர்களுடன் ஸ்ரீதிவ்யாவும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். வருகின்ற டிசம்பர் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. அதேபோல அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.