பொதுவாக சினிமாவில் நடிகர்களைப் பொறுத்தவரை உடல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று, சமீபகாலமாக ஹீரோக்கள் என்றாலே சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் ஹீரோயின் என்றால் மிகவும் ஒல்லியாக தான் இருக்க வேண்டும்.
உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தால் மட்டுமே சினிமாவில் சிறிது காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது, அதனால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம்.
அதுவும் கதாநாயகிகளுக்கு உடல் அமைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று உடல் எடை கூடிவிட்டால் சினிமாவிலிருந்து ஃபீல்ட் அவுட் ஆகி விடுவார்கள். உடல் எடை கூடிய பல நடிகைகள் சினிமாவை விட்டு வெளியே சென்றுள்ளார்கள். ஆனால் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும் பல வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இவர் சிவகார்த்திகேயன் சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அந்த படத்திற்கு பின்பு தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக ஜீவாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பார்ப்பதற்கு சின்னப் பெண் போல் இருப்பதால் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
சமீபகாலமாக நடிகைகள் அனைவரும் ஒல்லியான உடலமைப்பை பெற்று வருவதால் நடிகை ஸ்ரீ திவ்யா ஒல்லியாக வேண்டும் என்று கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார், இதனால் சமீபத்தில் ஜிம்மில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
