உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியத்தில் ஸ்ரீதேவியின் மெழுகு சிலை வைரலாகும் புகைப்படம்.!

0
sridevi
sridevi

தமிழ்சினிமாவில் நடிகை ஸ்ரீதேவியின் முடிசூடா ராணியாக இருந்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார், இந்திய திரை உலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தவர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி துபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார், மேலும் அவரது மரணம் தொடர்பாக சந்தேகம் இருந்ததால் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது அதில் அவரின் மரணம் இயற்கையானது என தகவல் வெளியானது.

sridevi
sridevi

அவரின் மரணம் பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவு தெரியாமல் இருந்தாலும் செப்டம்பர் மாதம் அவரது மெழுகுச் சிலையை அமைக்க உள்ளதாக சிங்கப்பூர் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

sridevi
sridevi