சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக சீரியலில் தலைகாட்டிய நடிகை ஸ்ரீதிவ்யா – புகைப்படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.!

sree-divya

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து தமிழில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் இந்த படத்திற்கு முன்பாகவே அவர் தெலுங்கில் மூன்று, நான்கு படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பின்னும் தமிழ் சினிமாவில் தான் இவர் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து ஜீவா, ஈட்டி, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், பென்சில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஒடிக்கொண்டு இருந்தாலும் அண்மைகாலமாக புதுமுக நடிகைகள் வரவேற்பு அதிகமானதால் இவருக்கான சினிமா வரவேற்பு குறைய தொடங்கியது.

இருப்பினும் தொடர்ந்து சினிமா உலகில் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். அதற்கேற்றார் போல அவ்வப்போது ஓரிரு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்த வருடத்தில் மலையாளத்தில் வெளியான ஜனகனமன படத்தில் நடித்து அசத்தி இருந்தார் என்பது ஒரு குறிபிடத்தக்கது.  இருப்பின்னும் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது அவரது ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா சினிமாவுலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக இவர் சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் வெளியான thoorpu velle railu என்னும் சீரியலில் குழந்தைக்கு தாயாக நடித்து அசத்தியுள்ளார் அதன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் தற்போது வாயடைத்துப் போய் பார்த்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

sree-divya
sree-divya