தற்பொழுது பணம் வசதி என ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாலும் 4வது பெண்ணாக பிறந்ததால் கொடுமைப்படுத்தப்பட்ட நடிகை சினேகா .! எமோஷனலான பதிவு..

snega
snega

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டுகளில் அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில் பிறகு நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளையும் பெற்றிருக்கும் நிலையில் சில காலங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

ஆனால் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகியாக நடித்திருந்தார்.  இதனை அடுத்து தற்பொழுது கதாநாயகியாக நடிக்காமல் தொடர்ந்து குணசத்திர வேடங்களில் நடித்தும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றம் வருகிறார்.

இவ்வாறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வரம் தோறும் பங்குபெற்று வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய வாழ்வில் நடந்த ஏராளமான தகவல்களை பகிர்ந்துக் வருகிறார். பொதுவாக பெண்ணாகப் பிறந்தாலே வீட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைமை இருந்து வருகிறது. அப்படி சினேகா அவரது வீட்டில் நான்காவது பெண்ணாக பிறந்தாராம்.

பெண் குழந்தை பிறந்து விட்டதால் பாட்டி மூன்று நாட்கள் அருகில் கூட வரவில்லையாம். மூன்றுக்கு ஒன்று ஃப்ரீ என அவரது அண்ணன் இவரை கிண்டல் செய்வாராம் மேலும் வீட்டில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துக் கொண்டு சினேகாவை எல்லா வேலையும் செய்ய வைப்பார்களாம். எதிர்த்து கேட்டால் நீ பொண்ணு நான் என சொல்வார்களாம் அந்த அளவுக்கு வீட்டில் ஏராளமான கஷ்டங்களை பட்டதாக சினேகா எமோஷனலாக பேசியுள்ளார். இவ்வாறு தற்பொழுது மகிழ்ச்சியாக எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்து வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் பொழுது இவரும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.