விஜய் செய்தது போல் செய்யணுமா.. அப்போ கண்டிப்பா நீ இத செஞ்சி தான் ஆகணும் பிரசன்னாவுக்கு கண்டிஷன் போட்ட சினேகா..

Actress Sneha conditioned Prasanna: தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவிற்கு விஜய் மாதிரி இருக்கணும்னா இத முதல்ல பண்ணுங்க என்று அட்வைஸ் கொடுத்திருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

முதல் படத்தின் மூலம் கிடைத்த வெற்றியினால் தொடர்ந்து விஜய், சூர்யா, கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். குறுகிய காலத்திலேயே சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரபலமான சினேகா தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்.

வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சினேகா சில வருடம் ப்ரேக்கிற்கு பிறகு தற்பொழுது மீண்டும் தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தனியார் சேனலில் நடக்கும் ரியாலிட்டி ஷோவிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் சினேகாலயா என்ற துணி கடையையும் அவர் தொடங்கி இருக்கும் நிலையில்  பிரசன்னாவுக்கு சினேகா கண்டிஷன் போட்டதாக கூறியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் இருவரும் இணைந்து அளித்த பழைய பேட்டி ஒன்றில், எங்களுக்கு திருமணமான புதிதில் வெளிநாடு ஒன்றுக்கு ஹனிமூன் போயிருந்தோம் அப்பொழுது குஷி படத்தில் விஜய் சார் காலில் கயிறை கட்டிக்கொண்டு Bungee jumping செய்வாரே அதை செய்யலாம் என்று முடிவெடுத்தேன் உடனே நான் கூட சினேகாவையும் அழைத்தேன் ஆனால் அவரோ வர முடியாது என்று சொல்லிவிட்டார்.

காலையில் டிபன் சாப்பிடுவது போல் ஒரு பெண்… இரவு டின்னர் சாப்பிடுவது போல் ஒரு பெண்.. பிரப பிரபல இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய நடிகர்..

இதனை அடுத்து அவரிடம் நான் நீ வரவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் அதற்கு என்னுடைய பெயரை நீ உன் உடலில் டாட்டூ போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். உடனடியாக நானும் அப்படியே செய்து கொண்டேன் பிறகுதான் அவர் அந்த Bungee jumping வந்தார் என்று பிரசன்னா கூறி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version