அட நம்ம திருடா திருடி சாயாசிங் கணவர் கிருஷ்ணாவா இது.! மெர்சலாக்கும் புகைப்படங்கள்

பொதுவாக சினிமாவில் பல நடிகைகள் நடித்த சில படங்களிலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துவிடுவார்கள்.  இப்படிப்பட்ட இவர்கள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் சினிமா விட்டு மொத்தமாக விலகி விடுவார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சாயா சிங். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த  திருடா திருடி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சிகளும் தற்போது வரையிலும் பிரபலமாக இருந்து வருகிறது.  இவ்வாறு பிரபலமடைந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கிருஷ்ணா வேறு யாருமில்லை சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் ஹீரோவாக பிரகாஷ் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான்.  இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் தற்போது இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளது.

இந்நிலையில் சாயா சிங் திருமணத்திற்குப் பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது  இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தனது கணவருடன் இணைந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment