புதிய படத்திற்காக பல கோடி சம்பளம் வாங்கும் நடிகை சிவகார்த்திகேயன்.? சம்பளத்தை கேட்டு பொறாமை படும் டாப் ஹீரோக்கள்.!

திரை உலகில் மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர்களில் ஒருவராக தற்போது பார்க்கப்படுபவர் சிவகார்த்திகேயன். இவரது திரைப்படத்திற்கு தற்போது ரசிகர்களையும் தாண்டி பொது மக்களின் வரவேற்பு அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.

இதனால் அவரது மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளது.

அதை சரியாக புரிந்து கொண்ட சிவகார்த்திகேயனும் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும் அழகான படங்களை நடித்து வருகிறார் அந்த வகையில் டாக்டர் திரைப்படம் வெகுவிரைவிலேயே OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான், அயலான் போன்ற படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் KV  இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆக உள்ளார் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறதாம்.

இந்தத் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன்னுக்கு 25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தற்போது கசிகின்றன. இப்படம்  உருவாகும் பட்சத்தில் அதிக சம்பளம் வாங்குவோர் லிஸ்டில் சிவகார்த்திகேயன் இணைவார் என தற்போது கூறப்படுகிறது.

வெகு விரைவிலேயே அதிக சம்பளம் வாங்குபவர்கள் லிஸ்டில் தற்போது சிவகார்த்திகேயன் இருக்கிறார் இவருக்கு பின் வந்தவர் கூட இவ்வளவு கோடி சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment