மாடர்ன் உடையில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை சினேகா.! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்பப்பாங்கான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை சினேகா இவருடைய அழகியனாலும், சிரிப்பினாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். மேலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இவரை புன்னகை அரசி என அழைத்தார்கள். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார்.

அந்த வகையில் விக்ரம், அஜித், விஜய், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட தற்பொழுது உள்ள பிரபல நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறிப்பாக இவர் தனுசுடன் புதுக்கோட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி மிகவும் பிசியாக இருந்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு தெலுங்கிலும் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று முன்னணி நடிகையாக கலக்கி வந்தார்.

இந்நிலையில் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணமான உடனே சினேகா கர்ப்பமானதால் அவரால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு மகன், மகள் என இருவர் உள்ளார்கள் மேலும் எந்த நடிகருக்கும் ஜோடியாக நடிக்காமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Snega
Snega

இப்படிப்பட்ட நிலையில் நடிகை சினேகா மற்ற நடிகைகளை போலவே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். புடவை, மாடன் டிரஸ் என கலக்கி வரும் இவருடைய அழகிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவருக்கு வயதானாலும் கொஞ்சம் கூட அழகு குறையவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Snega
Snega

அந்த வகையில் தற்பொழுது சிவப்பு நிற மாடர்ன் உடையில் மிகவும் ரொமான்டிக்காகவும், அழகாகவும் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்ட்களையும் ரசிகர்கள் அள்ளி குவித்து வருகிறார்கள்.

Snega
Snega

 

Snega
Snega

Leave a Comment