அடேங்கப்பா ஈரம் பட நடிகை சிந்துமேனனுக்கு இவ்வளவு பெரிய மகன்,மகளா ஆச்சரியப்பட்டு புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள்.!

வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது அந்த வகையில் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக திகழ்ந்த திரைப்படம் தான் ஈரம்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சிந்து மேனன் அப்பொழுது ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வந்தார்.

இதில் சிந்து மேனன் நடிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள் அதனைத் தொடர்ந்து சிந்து மேனன் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்து இருந்தார். அங்கேயும் தனது நடிப்பை காட்டி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

சிந்து மேனன் தனது திருமண வாழ்க்கையில் கடந்த 2010ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார் பின்பு பெங்களூரில் செட்டில் ஆன இவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள் இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

ஏனென்றால் அவரது மகள் மற்றும் மகன் ஆகிய இருவரும் மிக உயரமாக வளர்ந்து விட்டார்கள் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்கானது மட்டுமல்லாமல் சிந்து மேனன் இப்படி இருப்பது ஈரம் படத்தில் பார்த்த பொழுது எப்படி இருந்தாரோ அதேபோல் தற்பொழுதும் இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

sindhu menon
sindhu menon

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறார்கள் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்டை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment