90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன் இவர் விஜய், அஜித், பிரசாந்த், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.
சிம்ரனை இடை அழகி என்று தான் அழைப்பார்கள் ஏனென்றால் இவர் நடனமாடும் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. நடிகை சிம்ரன் ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திரை உலகிலிருந்து விலகி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தநிலையில் சிம்ரன் மீண்டும் பிரசாந்த் நடிப்பில் பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் Fredrick இயக்கும் அந்தாதுன் என்ற ரீமிக்ஸ் திரைப்படத்தில் தபு கதாபாத்திரத்தில் முதலில் ஐஸ்வர்யா ராயிடம் கேட்டிருந்தார்கள்.
அவர் சம்மதம் தெரிவித்து விட்டால் ஜீன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்கும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் ஆத்தாடி என்னால முடியாது என தெரிவித்து ஓடிவிட்டார்.

அதன்பிறகு தமிழில் அந்தாதுன் ரீமிக்ஸ் படத்தில் இடையழகி சிம்ரன் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார், இதுகுறித்து சிம்ரன் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார், மேலும் இந்த கதாபாத்திரம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கி கொடுக்கும் எனவும் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்ரன் நடிக்க உள்ள திரைப்படத்தின் கதாபாத்திரம் ஏடாகூடமாக இருப்பதால் என்ன சிம்ரன் இதெல்லாம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

ஏனென்றால் இந்த திரைப்படத்தில் கள்ளக்காதலுக்காக கணவனை போட்டுத் தள்ளும் கதாபாத்திரத்தில் தான் சிம்ரன் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.