நான் பெஸ்ட் டிரைவர் இல்லை.. மலைப் பகுதியில் தாறுமாறாக லாரி ஓட்டிய நடிகை ஸ்ருதி ஹாசன்.!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுருதிஹாசன் ஆவார். இவர் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு பன்முகத்திறமை கொண்டுள்ளார். இவர் தமிழ் திரையுலகில் ஹேராம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 2011ஆம் ஆண்டில் சூர்யா நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து 3,பூஜை , புலி,  வேதாளம்,  சிங்கம்3 உட்பட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் இந்தி, தெலுங்கு திரைபடங்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகராகவும் பல படங்களில் பாடியுள்ளார். ஸ்ருதிஹாசன் தனது ஆறு வயதிலேயே தனது முதல் பாடலை பாடியுள்ளார்.

இந்த நிலையில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தற்போது திரையுலகில் விளங்குகிறார்.இவர் தமிழில் லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார் இப்படத்தை ஜனநாதன் இயக்குகிறார்.

அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் படம் ஒன்றில் நடித்து வருகிறார் இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள் எனவும் இப்படத்தை இயக்குனர் திக்மன்ஷு துலியா  இயக்குகிறார் இப்படத்திற்கு யாத்ரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுருதிஹாசனிடம் இப்படத்தினைப் பற்றி ஒரு சில கேள்விகள் கேட்கும் பொழுது அதில் லாரி ஓட்டும் சம்பவம் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என கூறியுள்ளார்.

அதாவது உத்தரகாண்ட் மலையில் லாரி ஓட்டுவது என்பது மிகவும் கடினமானது நான் லாரி ஓட்டும் பொழுது ஸ்ன்டன் யூனிட்டை சேர்ந்தவர் கிளட்ச் மற்றும் கீரை மாற்ற உதவி செய்வார் எனவே அது எவ்வளவு கடினமான வேலை என்பது எனக்கு தெரியும் அவரை நான் பாராட்டுகிறேன் என கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில மாதங்களுக்கு முன்பு நான் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் எனவும் இதனைக் கூறுவது எனக்கு எந்த ஒரு வெட்கமும் இல்லை என கூறியிருந்தார்.

இவ்வாறு ஸ்ருதிஹாசன் தனது பல உண்மைச் செய்திகளை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் இந்த செய்திகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Leave a Comment

Exit mobile version