நடுக்கடலில் தனது கணவருடன் கும்மாளம் போட்ட நடிகை ஸ்ரேயா..! வைரலாகும் வீடியோ..!

0

actress shriya saran latest video goes viral: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர்தான் நடிகை ஸ்ரேயா. இவரது முழுப்பெயர் ஸ்ரேயா சரண்.ஆரம்பத்தில் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து பல்வேறு விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்று அதன் பின்னர்தான் இவருக்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார்.  அத் திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு நல்ல பெயர் கிடைத்த காரணத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் சிவாஜி திரைப்படத்தில் நடித்து தனக்கான பெயரையும் புகழையும் ஒரு அந்தஸ்தையும் பெற்றுக்கொண்டார்.

அதன்பிறகு பிரபல நடிகர்களான விக்ரம், விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.  இப்படி ஒரு கட்டத்தில் கொடிக்கட்டி வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஸ்ரேயா அவர்கள் இடையில்  திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் சற்று குறைய ஆரம்பித்தது.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா.  திருமணத்திற்குப் பிறகும் கிடைத்த வாய்ப்பை நடித்துக் கொண்டு வருகிறார்.  அந்த வகையில் தற்பொழுது நடிகை ஸ்ரேயா அவர்கள் இயக்குனர் ராஜமௌலி இயக்கிவரும் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறாராம்.

அதேபோல தெலுங்கு மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்த மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரேயா.இப்படிப் பிற மொழிகளில் ஆர்வம் காட்டி வந்த நடிகை ஸ்ரேயா அவர்கள் தற்போது தமிழ்த் திரையுலகிலும் ரீ-என்ட்ரி கொடுக்க விரும்புகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் இவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா அவர்கள் தனது கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிட்டு வருவது இவருடைய வழக்கம்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் தனது கணவருடன் நடுக்கடலில் கும்மாளம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வலம் வருகிறது.

இதோ அந்த வீடியோ.