பல வருடங்களுக்கு பிறகாக பெற்றெடுத்த குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்..!

shriya koshal
shriya koshal

actress shriya goshal son picture: திரை உலகில் மிக பிரபலமான பாடகியாக வலம் வருபவர் தான் பாடகி ஸ்ரேயா கோஷல்.  இவ்வாறு பிரபலமான பாடகி சில நாட்களுக்கு முன்பாக கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த நமது பாடகி தன்னுடைய ஆறு வயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக பல ரியாலிட்டி ஷோக்களிலும் மேடைகளிலும் பல பாடல்களைப் பாடி அசத்தியிருந்தார்.

இவ்வாறு இவருடைய குரலை கண்டு வியந்து போன பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பான்சாலி உடனே இவரை பாராட்டியது மட்டுமல்லாமல் அவர் இயக்கும் தேவதாஸ் திரைப்படத்தில் அவரை பாடவைத்து அழகு பார்த்தார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே 5 பாடல்களை பாடி அசத்தியிருப்பார்.

சுமார் 18 வருடங்களாக பாடகியாக வலம் வரும் நமது ஸ்ரேயா கோஷல் தற்போது தமிழ் மொழி மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி  போன்ற பல்வேறு மொழிகளில் தனது குரலை பதித்தது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் கொடுத்துவிட்டார்.

இவர் இசைஞானி இளையராஜா அனிருத் ஏ ஆர் ரகுமான் என அனைவருடனும் பணியாற்றி இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் இசையில் இவர் பாடிய பாடல்களை மட்டும் யாராலும் மறக்க முடியாது. இவ்வாறு திரை உலகில் பிரபலமாக இருக்கும் போது தனது காதலனை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா கோஷல் வெகுநாட்களாக குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே இருந்தார்.

shriya koshal
shriya koshal

இந்நிலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நமது பாடகி வெகு நாட்களுக்கு பிறகு தன்னுடைய குழந்தையின் புகைப்படம் மற்றும் அவருடைய பெயரை சமூக வலைதள பக்கத்தில்  பகிர்ந்துள்ளார் அவருடைய மகனின் பெயர் முகோபாத்யாயா.

shriya koshal
shriya koshal