ஹோலி பண்டிகையை முன்னிட்டு தனது இடுப்பு நடனத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் துடிக்க வைத்த நடிகை ஸ்ரேயா.!

0

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது  நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

மேலும் ரஜினியுடன் இணைந்து நடித்த பிரபல நடிகைகள் பலரும் தற்போது ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள் அந்த வகையில் சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகை தான் ஸ்ரேயா சரண்.

இவர் அந்த திரைப்படத்தில் ஆடிய நடனம் ரசிகர்களை பெரும்பாலும் மயக்கியது என்றுதான் கூற வேண்டும் அவ்வாறு அவர் ஆடிய பாடல்களில் லேசாக கவர்ச்சியையும் காட்டி இருப்பார் என்பதும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் சிவாஜி திரைப்படத்தை தொடர்ந்து ஸ்ரேயா தமிழில் அழகிய தமிழ் மகன்,குட்டி,கந்தசாமி,திருவிளையாடல் என ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.இவரது திருமண வாழ்க்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய இசை கலைஞரை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தாலும் இவர் தற்போது தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

மேலும் நேற்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடியதை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தனது திருமண நிகழ்வின் போது ஹோலி கொண்டாடி கணவருடன் இணைந்து பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர் பதிவு செய்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணித்து வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.