தனது மகளுக்கு தமிழ் பெயர் வைத்த நடிகை ஸ்ரேயா.? வாழ்த்து சொல்லி கொண்டாடும் ரசிகர்கள்.

shreya
shreya

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார் ஆனால் தமிழில் வருவதற்கு முன்பாக இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப் படங்கள் நடித்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் விரைவிலேயே விக்ரம், தனுஷ், விஜய், ரஜினி போன்ற டாப் நடிகர்கள் படங்களில் கைகோர்த்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இப்படி முன்னணி நடிகரின் படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு இடத்தை சரியாக தேர்ந்தெடுக்காமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் தாக்கி கொண்டிருந்ததால் ஒருகட்டத்தில் அனைத்து சினிமாவும் இவரை உதறித் தள்ள ஆரம்பித்தது.

இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக நீண்ட நாளாக காதலித்து வந்த வெளிநாட்டு நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர் சினிமா உலகில் நுழைய முட்டி மோதினாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியேறி ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும்போது ஆக மாறினார்.

இதனால் வாய்ப்புகள் ஓரிரண்டு கிடைத்துக் கொண்டுதான் வருகிறது அதற்காக அம்மணி தனது திறமையை வெளிக்காட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். போட்டோ ஷூட் மூலம் தான் வாய்ப்பு கிடைத்தது என்பதை உணர்ந்துகொண்ட ஸ்ரேயா திருமணம் செய்து கொண்ட பிறகும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வீடியோ மற்றும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இவர் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் 2020ஆம் ஆண்டு லாக் – டவுனில் நடிகை ஸ்ரேயாவும், andrei koscheev என்பவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் வீடியோவை வெளியிட்டு தனது  குழந்தையை காண்பித்து இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகை ஸ்ரேயா தனது குழந்தைக்குப் பெயர் வைத்துள்ளார். தனது குழந்தைக்கு அவர் “ராதா” என பெயர் சூட்டி உள்ளார் ரஷ்ய மொழியில் “ராதா” என்றால் சந்தோஷம் என்று அர்த்தமாகும் மேலும் சமஸ்கிருதத்திலும் ராதா என்றால் சந்தோஷம் என அர்த்தம் என்ற காரணத்தினால் “ராதா” என்ற பெயரையே வைத்துள்ளார்