குந்தவையாக மாறிய ஷிவானி நாராயணன்.! இந்த குண்டு குந்தவை கூட நல்லா தான் இருக்காங்க…

0
Shivani Narayanan
Shivani Narayanan

தமிழ் சினிமாவில் நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியல் பக்கம் தாவுவார்கள் ஆனால் சமீப காலமாக சீரியலில் நடித்து வரும் நடிகைகள் சினிமாவில் கால் தடம் பதிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம் பிரியா பவானி சங்கர், சிவானி நாராயணன், வாணி போஜன் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இப்படி டிக் டாக் மூலம் புகழ்பெற்ற சிவானி நாராயணன் தொலைக்காட்சியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்து வந்தவர் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இவர் கடைசி வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்களை கவர்ந்தார்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மூன்று மனைவிகளை திருமணம் செய்து இருப்பார் அவர்களில் ஒருவராக ஷிவானி நாராயணன் நடித்திருந்தார். இவர் முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

Shivani Narayanan
Shivani Narayanan

தற்பொழுது சிவானி நாராயணன் பம்பர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு வடிவேலு நடிப்பில் வெளியாகிய நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். என்னதான் சிவானி நாராயணன் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கவில்லை.

Shivani Narayanan
Shivani Narayanan

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் பல நடிகைகள் குந்தவை வேடம் போட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Shivani Narayanan
Shivani Narayanan

அந்த வகையில் சிவானி நாராயணன் குந்தவையாக மாறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குண்டு குந்தவை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Shivani Narayanan
Shivani Narayanan