விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இளம் வயதிலேயே துறையில் அடியெடுத்து வைத்தாலும் சிறப்பான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்ததால் வெகுவிரைவிலேயே மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் குடியேறினார்.
மேலும் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து அசத்தியுள்ளார் அந்த வகையில் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் இப்படி சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென அதிலிருந்து வெளியேறி இன்ஸ்டா பக்கத்தில் குடியேறினார் அதுவும் தினமும் 6,7 புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்தார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4 – ல் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தது. இதில் தனது திறமையை காட்ட ஆரம்பித்தரோ இல்லையோ காதல் வலையில் விழுந்தார். அதன்பின் தட்டுத்தடுமாறி பிக்பாஸில் இருந்து ஒரு வழியாக மக்களின் மனதை சம்பாதித்து வெளியேறினார்.
வெளிவந்த இவருக்கு படவாய்ப்புகள் ஆரம்பத்தில் கிடைக்காததால் மீண்டும் இன்ஸ்டா பக்கத்தில் குடியேறி ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்க குட்டையான உடைகளை அணிந்து வலம் வந்தார். இந்த நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் கமல் இணைந்து உள்ள “விக்ரம்” படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சிறப்பாக தேர்ந்தெடுத்து தற்பொழுது சிவானி நாராயணனும் நடித்துவருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு மென்மேலும் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுக்கு மேல் கவர்ச்சி காட்டினால் படங்களிலும் கவர்ச்சியான கதா பாத்திரத்தில் தன்னை போட்டுவிவார்கள் என்பதை உணர்ந்து முற்றிலுமாக மாற்றி கொண்டு ஷிவானி நாராயணன்.
பாவாடை தாவணியில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் இழுத்துப் போட்டுக்கொண்டு முதல்முறையாக புகைப்படத்தை இன்ஸ்டா வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் எங்க உங்க கவர்ச்சியை காணும் என கூறிய கமெண்ட் அடித்து வருவதோடு லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
