இன்னைக்கு மட்டும் அடக்க ஒடுக்கமாக வலம் வரும் ஷிவானி நாராயணன் – என்ன காரணம் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.!

மாடலாக இருந்து பின்பு சின்னத்திரை நடிகையாக இரட்டை ரோஜா, பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் நடித்து அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். பின்பு இவருக்கு ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை பயன்படுத்திக் கொண்ட ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்துகொண்டு நீண்ட நாட்கள் பயணித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்த ஷிவானி நாராயணனுக்கு திரை பட வாய்ப்புகளும் சில வந்தன.

அப்படி ஷிவானி நாராயணன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், ஆர்ஜே பாலாஜி உடன் ஒரு படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி தற்போது பிசியாக நடித்து வருகிறார். ஆனால் இவர் நடித்த படங்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சோஷியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஷிவானி நாராயணன் அவரது ரசிகர்களுக்காக தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் நேற்று ஷிவானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு..

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன. மேலும் நேற்று நடந்த  ஷிவானியின் பர்த்டே கொண்டாட்டத்தில் அவரது நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

shivani-narayanan
shivani-narayanan
shivani-narayanan
shivani-narayanan

Leave a Comment