பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டீங்களே.. ஷிவானி நாராயணன் வெளியிட்ட பாத் டப் புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் அடி எடுத்து வைத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை சந்தானம், சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியவர்களை தொடர்ந்து தற்பொழுது கால் தடம் பதித்து வெற்றிகளை அள்ளி வருபவர் தான் ஷிவானி நாராயணன்.

முதலில் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு, சரவணன் மீனாட்சி சீசன் 3, ராஜா ராணி சீசன் 1, ரெட்டை ரோஜா  போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் பிறகு மாடலிங் துறையில் நுழைந்ததால் கிளாமர் காட்டிய புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென வெள்ளி திரையில் கால் தடம் பதித்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது டாப் ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். எடுத்த உடனேயே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்த அசதினார். அதனைத் தொடர்ந்து வீட்டில் விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் போன்ற படங்களில் தலைகாட்டி வெற்றி கண்டார்.

தற்பொழுது கூட பம்பர் என்ற திரைப்படத்தில் ஆனந்தி  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி பிஸியாக ஓடினாலும் அவ்வபோது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதுபோல தற்போது பாத் டப்பில்  நுரை பொங்க ஆனந்த குளியல் போட்டுள்ளார்.

அதன் புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நாராயணனின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shivani
shivani

Leave a Comment