சமீப காலங்களாக தொடர்ந்து சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை சோசியல் மீடியாவில் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் இவர்களின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை அளித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக இவர்களுக்கு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மேலும் சோசியல் மீடியாவின் மூலமும் தனியாக சம்பாதித்து வருகிறார்கள் அந்த வகையில் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் தான் இவருக்கு பிக்பாஸ் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பே கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ஷிவானி நாராயணன் நடித்து இருந்தார். இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில் அதில் மூன்றாவது மனைவியாக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பம்பர், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அதோடு மட்டுமல்லாமல் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்தும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது வெள்ளை கருப்பு நிற உடையில் எடுத்துக் கொண்ட கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இருக்குதப்பாக பல கமெண்டுகளை வர்ணித்து வருகிறார்கள்.
