பாவாடை தாவணியில் பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் ஷெரின் – இளசுகளை சுண்டி இழுத்த புகைப்படம்.

தமிழில் முதலில் 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷெரின். பின்பு இவர் விசில் திரைப்படத்தில் நடித்து அவரது அழகு மற்றும் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அந்த நேரத்தில் இவருக்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற பல்வேறு மொழி திரைப்பட வாய்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. பின்பு இவர் திடீரென்று உடல் எடை கூடி பட வாய்ப்பை இழந்து நின்றார். பிறகு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல்  நண்பேன்டா, பீமா போன்ற ஒரு சில படங்களில் துணை கதாநாயகியாக நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் நடிகை ஷெரீன் தனது மார்க்கெட்டை உயர்த்தி கொள்வதற்காக மக்களிடையே பிரபலம் அடைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக விளையாடி 100 நாட்களை கடந்து பைனல்ஸ் வரை சென்றுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் அரைகுறை உடையில் வலம் வந்து இளம் ரசிகர்களை கட்டி இழுத்தார்.

தற்போது ஷெரின் உடல் எடையை குறைத்து சும்மா கும்முனு மாறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் தனது ரசிகர்களுக்காக கிளாமரான புகைப்படங்களை வழக்கமாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவார். அந்த வகையில் தற்போது ஷெரின் விஜய் டிவியில் பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் அவர் உடுத்திய  தாவணி பாவாடை உடையில் புகைப்படம் எடுத்து தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்.

sherin
sherin

Leave a Comment