தீனா திரைப்படத்தில் லைலா உடன் நடித்த குட்டி பெண்ணா இது.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித், லைலா, சுரேஷ்கோபி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் தீனா. எஸ் ஜே சூரியாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் முருகதாஸ். இவர் முதன்முதலில் அஜித்தின் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர் அந்தஸ்தைப் பெற்று விட்டார்.

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்கள். குழந்தை நட்சத்திரமாக நடித்த பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் நடிகராகவும் வலம் வருகிறார்கள். அந்த லிஸ்டில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி நடிகையாக நடித்து வந்தவர் ஷீலா. இவர் தமிழில் பூவே உனக்காக,  மாயா, நந்தா, கோல்மால் என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Actress-Sheela

மேலும் இவர் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த லைலா உடன் பள்ளி பெண்ணாக நடித்திருந்தார். பிறகு வீராசாமி, சீனாதானா நாட்நாட் 1 கண்ணா என பல திரைப்படங்களில் நடிகையாக நடித்து இருந்தார். ஒரு காலகட்டத்தில் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது அதனால் இரண்டு மூன்று வருடங்களாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார் அதனால் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கியது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் தான் அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள் இந்நிலையில் இவரின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Actress-Sheela

Leave a Comment

Exit mobile version