என் வாழ்க்கையில் அந்த தவறை மட்டும் செய்யவே மாட்டேன் சிம்பு பட நடிகை அதிரடி.!

சினிமாவில் உள்ள பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் 40 வயதாகியும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு காரணம் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் அழகு குறைந்து விடுமோ என்று பயந்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் சிலரை காதலித்து ஏமான்றதால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சிம்பு நடிகரான காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சார்மி. இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் காதல் அழிவதில்லை திரைப்படத்தை தொடர்ந்து காதல் கிசுகிசு,ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் தமிழைவிடவும் தெலுங்கில் தான் இவருக்கு மவுசு அதிகம். இந்நிலையில் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து வந்த இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 10என்றதுக்குள்ள திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த ஜோதி லக்ஷ்மி திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் கதாநாயகியாக நடிக்க ஆர்வம் காட்டவில்லை.  தற்பொழுது இவர் தெலுங்கில் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் லிகர் திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு 35 வயதானாலும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை பற்றி சில ஆண்டுகளாக பல கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அந்தவகையில் சார்மி சிம்புவுடன் இணைந்து நடித்து வந்த காதல் அழிவதில்லை திரைப் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

ஆனால் அதன் பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை இருவரும் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் தற்போது வரையிலும் சார்மி திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இதனைப் பற்றி அவரிடம் கேட்கும்போது எனக்கு இப்படி இருக்க தான் பிடித்திருக்கிறது திருமணம் செய்து கொண்டு மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனவே பத்திரிக்கையாளர்கள்,  மற்றும் பல பிரபலங்கள் சொல்லும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.