தனது மருமகன் அஜித் குறித்து ஷாலினியின் அப்பா நெகிழ்ச்சி.. இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா?

Actor Ajith: நடிகர் அஜித் குறித்து ஷாலினியின் அப்பா ஏ.எஸ் பாபு நிகழ்ச்சியுடன் பேசியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம் திரைப்படத்தில் இணைந்து நடித்த அஜித்தும் ஷாலினியும் காதலிக்க தொடங்கினார்.

பிறகு அஜித் ஷாலினியின் அப்பாவை நேரில் சந்தித்து தங்களது காதல் குறித்து பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார். அப்படி அஜித்- ஷாலினியின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு மகளும், ஆத்திக் என்ற மகனும் இருக்கின்றனர்.

அஜித் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை என்றாலும் அஜித்துடன் பிக்னிக் செல்லும் அழகிய புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதனை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி இவர்களுடைய புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் பொழுது ஒருமுறை ஷாலினி, சரண், அஜித் மூன்று பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ‘சரண் சீக்கிரம் ஷூட்டிங்கை முடிச்சுடுங்க இல்லைனா நான் ஷாலினிய லவ் பண்ணிடுவேன் போல பயமா இருக்கு’ என்று தனது காதலை போட்டு உடைக்க இதனை கேட்டு ஷாலினி சிரித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கட்டத்தில் ஷாலினிக்கும் அஜித்தை பிடித்து போக தனது அப்பாவிடம் பேச சொல்லி உள்ளார். ஷாலினியின் அப்பாவிடம் பேசி தங்களது திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார் அஜித். இந்நிலையில் ஷாலினியின் தந்தையும், அஜித்தின் மாமனாருமான ஏ.எஸ் பாபு தனியார் ஊடகம் ஒன்று இருக்கு சமீபத்தில் பேட்டி வடித்துள்ளார்.

அதில் தனது மருமகன் அஜித் குறித்து பேசிய பாபு, அஜித்குமார் எப்போதுமே வேகம் தான். குடும்பத்தோடு எங்கள் வீட்டுக்கு வந்து கல்யாண தேதியை முடிவு செய்தார்கள் அன்று எப்படி இருந்தாரோ இப்போது வரையும் அப்படியே தான் இருக்கிறார். இரண்டு குடும்பங்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறோம். இரண்டு குடும்பங்களையும் அப்படி தாங்குகிறார்.

அவர் அஜித்துக்கும் ஷாலினிக்கும் ஜாதகம் பார்க்கும் பொழுது 10 பொருத்தமும் பக்காவாக இருந்ததாக சொன்னார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான் அப்படி ஒரு ஜோடி அவர்கள் .அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை இன்னொரு மகன் வீட்டுக்கு யார் வந்தாலும் தண்ணீர் கொடுப்பதிலிருந்து சாப்பாடு பரிமாறுவது வரை அவரே தான் செய்வார். வேலையாட்களை குடும்ப உறுப்பினர்கள் போல் நடத்துவார். அந்த குணம் மற்றவர்களையும் பற்றிக்கொள்ளும் அவ்வளவு பாசிடிவ்யோடு அன்பை பரிமாற தோன்றும் என்றார்.