மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் நடிகை ஷாலினி.? ரீ என்ட்ரியே வேற லெவலில் இருக்குது.? ஆச்சரியப்படும் மற்ற நடிகைகள்.

0

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயின் என்ற அந்தஸ்தை சரியாக பிடித்து வளர்ந்தவர் நடிகை ஷாலினி. ஹீரோயின் ஆன பிறகு ஷாலினி சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டியதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது.

அந்த வகையில் காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, அமர்க்களம் போன்றவை இன்றும் மக்களுக்கு  பிடிக்கும். இதில் அவரது நடிப்பு உச்சத்தைத் தொட்டு இருக்கும் ஆனால் அமர்க்களம் திரைப்படத்தின் போது அஜித்தை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டதால் அதன்பிறகு இவர் சினிமா என்ட்ரி ஆகவே இல்லை.

மேலும் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பில் அதிகம் ஈடுபட்டார் தற்போது அவருக்கு ஒருமகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இப்போது அவர்களும் நன்றாக வளர்ந்து விட்டதால் இனி படங்களில் நடிக்க மாட்டார் என பலரும் நம்பிய நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது ஒரு மெகா ஹிட்  படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிறந்த படைப்பாளி என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்திக் இருக்கும் மணிரத்னம் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை எடுத்து வருகிறார். ஏற்கனவே பல டாப் நடிகர், நடிகைகள் இணைந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் ஷாலினி இணைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இதன் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஷாலினி. இந்த படத்தில் இவருக்கு முக்கியத்துவம்  வாய்ந்த தோற்றம் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரையிலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.