செம மாடர்ன் உடையில் ஷாலினி மற்றும் அஜித்தின் மச்சினிச்சி.! வைரலாகும் புகைப்படம்

பொதுவாக சினிமாவில் உள்ள பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமா பக்கமே தலை காட்டாமல் வாழ்ந்து வருகிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஷாலினி.

இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி பல வருடங்களாக நடித்து சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக நடித்து தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தார்.

அதன்பிறகு தல அஜித்துடன் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதால் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.  திருமணத்திற்குப் பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தல அஜித்தின் பிறந்தநாள் மிகவும் கோலாகலமாக மே 1ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அந்தவகையில் அஜீத்தின் ரசிகர்கள் அஜித்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து பல திரை பிரபலங்களும் இவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.

அந்த வகையில் தல அஜித் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. அந்தப் புகைப்படத்தில் தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் இருந்தார்கள். இதனை தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஷாலினி மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் ஷாலினி மற்றும் அவரின் தங்கை ஷாமிலி இருவரும் அல்ட்ரா மாடர்ன் உடையில் இருக்கிறார்கள்.இதுவரையிலும் ஷாலினியை அல்ட்ரா மாடர்ன் உடையில் நாம் பார்த்தது இல்லை. தற்பொழுது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment