ரசிகர்களின் கனவு ராணி ஷகிலா தனது மகள் குறித்து முதன் முதலாக மனம் திறந்து பேசியுள்ளார்.

0

சினிமாவிற்கு வரும் பிரபலங்கள் பலரும் சினிமாவில் ஹீரோயின் அல்லது ஹீரோவாக வலம் வர ஆசைப்படுவார்கள் ஆனால் அவர்களுக்கு எல்லோருக்கும் அமைகிறதா என்றால் கேள்விக்குறிதான்.

அப்படித்தான் நடிகை ஷகிலாவுக்கு சினிமா உலகில் நடிகையாக வலம் வர வேண்டும் என எண்ணி வந்தாலும் அவருக்கு கைகொடுத்தது என்னமோ கவர்ச்சி நடிகை பட்டம் தான் ஆனால் அதையும் தேர்ந்தெடுத்து வெற்றி கண்டார்.

இவர் கவர்ச்சியான திரைப்படங்களில் நடித்து வெளிவரும் போது டாப் நடிகர்களின் படங்கள் கூட சற்று தடுமாறும் ஏனென்றால் அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

மேலும் இவரது திரைப்படங்கள் வசூலில் வேற லெவலில் ஆள்ளுவதால்  டாப் நடிகரின் திரைப்படங்களுக்கு இணையாக இவரது படங்கள் ஓடியது என பல பிரபலங்கள் கூறியதை நாம் கண்டுள்ளோம்.

மலையாள சினிமாவில் வலம் வந்த இவரை ஒரு கட்டத்தில் மலையாள சினிமா ஒரு கட்டத்தில் அடித்து வெளியில் துரத்தியது அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டும் சகிலா திடீரென சின்னத்திரை பக்கம் திரும்பி “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அதில் இருக்கும் பிரபலங்கள் தொடங்கி பலரும் இவரை “ஷகிலா அம்மா” என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனது மகள் மளா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியது : எனக்கு திருமணம் ஆகவில்லை.. இருப்பினும் நான் திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் என்னுடைய வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை உறுதுணையாக இருந்தவர் மீளா. அதுபோல அவருடைய வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளுக்கு துணையாக நான் இருந்திருக்கிறேன். அவரை நான் எனது மகள் போல வளர்த்து வருகிறேன் என கண்கலங்க குறிப்பிட்டார்.

அவர் இல்லை என்றால் நான் இல்லை இல்லை.. என சோகமாக பதிலளித்தார் ஷகிலா மேலும் அவர் திருநங்கையாக இருந்தாலும் தனக்கென ஒரு தொழிலை செய்து வருகிறார்.

இவர் தற்பொழுது ஆடை வடிவமைப்பாளராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.