இந்த சீரியலில் தான் நடித்தார் ஷகிலாவின் திருநங்கை மகள்.!! வைரலாகும் புகைப்படம்.

0

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து தன்னை அங்கீகரித்துக் கொண்டவர் நடிகை சகிலா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு,  மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து வலம் வந்தவர்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  கவர்ச்சி நடிகை என்கின்ற தனது இமேஜை  முற்றிலுமாக மாற்றி தற்போது அனைவரும் மதிக்கும் அளவிற்கு மாறி உள்ளார்.

மேலும் அது மட்டுமில்லாமல்  இந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் மிக எளிமையாக பேசி பழகி கவர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடந்த குக் வித் கோமாளி ஷோவில் எலிமினேஷனில் வெளியேறி உள்ளார்.

shakila11
shakila11

அதனைத் தொடர்ந்து மீண்டும் இவர் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே வருவார் என எதிர்பார்த்து உள்ளனர் ரசிகர்கள்.இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் இவர் தனது வளர்ப்பு மகள் என ஒரு திருநங்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஷகிலாவின் மகளான திருநங்கை மில்லா ஒரு பேஷன் டிசைனராகவும் மாடலாகவும்  உள்ளார்.மேலும் இவர் திருநங்கையாக மாறுவதற்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தியாகம், மருதாணியின் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

milla
milla