இந்த விஷயத்தில் நயன்தாராவை எனக் மிகவும் பிடிக்கும் எனக் கூறிய நடிகை ஷகீலா.! அப்படி நான் இருந்திருந்தேனா இந்நேரம் வேற லெவலில் இருந்து இருப்பேன்..

shakila
shakila

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷகீலா கடந்த 1995ஆம் ஆண்டு வெளிவந்த ப்ளே கேர்லஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அடுத்தடுத்த பல திரைப்படங்களிலும் நடித்து அசத்திய வந்தார்.

இவர் கவர்ச்சியாக நடித்தனால் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் மேலும் இவருடன் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எனவே இவர் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்ததனால் பலரும் ஆபாசமான வார்த்தைகளால் இவரை திட்டி வந்தனர். எனவே ஒரு கட்டத்திற்கு பிறகு இதனை வெறுத்த ஷகிலா மொத்தமாக சினிமாவை விட்டு வெளியேறினார்.

தற்பொழுது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் ஷகீலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மக்களை மகிழ்வித்து தற்பொழுது ஷகீலா அம்மா என அனைவரும் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.அதாவது ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை தான் என இருந்து வந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் ஷகிலா அம்மா என புகழ் அழைத்ததனால் தற்பொழுது அனைவரும் ஷகீலாவை அம்மா என கூப்பிட தொடங்கி விட்டனர்.

எனவே சமீப காலங்களாக சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் பேட்டியில் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, நயன்தாரா அவர்கள் இப்பொழுது லேடிஸ் சூப்பர் ஸ்டார்.. ரொம்ப கடின உழைப்பாளி.. அவருடைய உடல் பராமரித்துக் கொள்வதற்கு அவர்கள் எவ்வளவு குறைவாக சாப்பிட வேண்டும் அது எல்லாம் மிகவும் கஷ்டம் அல்லவா.. அந்த மாதிரி எல்லாம் நான் ஒரு நாள் இருந்தால் கூட நான் வேற லெவல் இருந்து இருப்பேன்.. ஒரு நாள் கூட நான் சாப்பாட்டை குறைத்துக் கொண்டு இருந்ததே கிடையாது.

அவர் செய்வது கடின உழைப்பு மேலும் இப்பொழுது அவர் செய்துள்ள அந்த வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தைகள் இப்பொழுது சமீபத்தில் அந்த வீடியோவில் அந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு பாம்பேவில் இருந்து வரும் வீடியோ எனக்கு மிகவும் பிடித்தது அந்த வீடியோவில் அவர்கள் அந்த குழந்தையை அப்படியே தன் நெஞ்சோடு வைத்து அழைத்து வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அந்த விஷயம் எனக்கு அவர்களிடம் ரொம்ப பிடித்திருந்தது என தெரிவித்துள்ளார்.