தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா, இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது, பின்பு இருவேட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தற்போது இருவரும் இணைந்து டெடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்டு அனைவரும் கடைப்பிடித்து வருகிறார்கள் அதனால் பல மக்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

அதேபோல் சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கிய நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்ததை செய்து இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், அந்தவகையில் சாயிஷா புதிது புதிதாக கேக் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த ஊர் அடங்கில் விதவிதமாக சமைத்த பிரியாணி, மாங்காய், கேக், சாக்லேட் பாஸ்டரி சிக்கன் ஆகிய ரெசிபிகள் செய்து அசத்தியுள்ளார்.

