நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த சீரியல் நடிகரா!! வைரலாகும் புகைப்படம்

0

actress saranya first husband photo:கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சரண்யா. இவர் தனது திரை வாழ்க்கையை ஹீரோயினியாக தொடர்ந்து தற்போது முன்னணி நடிகைகளுக்கு அம்மாவாக நடித்து அனைத்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அம்மா என்ற கேரக்டரில் நடிப்பதற்காக சரண்யா பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவர் பற்றிய சில உண்மை செய்திகள் வைரலாகி வருகிறது. அதாவது இவர் 1995ஆம் ஆண்டில் பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

ஆனால் பொன்வண்ணனிற்கு முன்பு வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்த நடிகர் ராஜசேகரை 1987 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் இவர்களின் திருமணம் ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. அதன்பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்களாம் அப்புறம் தனியாக வாழ்ந்து வந்த சரண்யா 1995 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவரின் முதல் கணவர் ராஜேகர்  சில வருடங்களுக்கு முன்புதான் இயற்கை எய்தார்.

rajasekar
rajasekar