பூவே உனக்காக படத்தில் நடித்த பிறகு ஆள் அட்ரஸ் தெரியாமல் போன நடிகை சங்கீதா.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் தற்போது அசைக்க முடியாத நடிகர்களாக பலர் உள்ளனர் அவர்கள் கூட ஆரம்பத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து உள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யை தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து சிறப்பாக வலம் வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தொடர் சறுக்கல்களை சந்தித்து உள்ளார்.

அப்படி வந்த இவருக்கு ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன் 1996-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சங்கீதா எதார்த்தமான ரோலில் நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதுபோன்ற பல்வேறு சிறப்பான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவருக்கு இது ஆரம்ப காலகட்டத்தில் பல ரசிகர்கள் இருந்தனர் ஆனால் இவர் பூவே உனக்காக திரைப்படத்தின் போது ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரவணனை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு பெரும்பாலும் படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.

மேலும் இவரை மீடியாவிலும் பார்க்க முடியவில்லை.

நடிகை சங்கீதாவும் அவரது கணவர் சரவணன் இணைந்து சமீபத்திய பேட்டி ஒன்று கொடுத்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றன

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version