ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சனம் ஷெட்டி… பயபுள்ள சரியா மாட்டுச்சு..

0

முன்பெல்லாம் ஒரு நடிகையை எட்டியிருந்தது பார்ப்பதே கடினம் அதைவிடவும் பேசுவதென்றால் நடக்காத ஒரு காரியம் ஆனால் தற்போதெல்லாம் தொடர்ந்து நடிகைகள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது என சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இதனால் ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரித்தாலும் பல ரசிகர்கள் ஆபாசமான கேள்விகளை நடிகைகளிடம் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் ஆபாசமாக கேட்ட நபர் ஒருவருக்கு சனம் செட்டி கொடுத்துள்ள பதிலை பற்றி தற்போது பார்ப்போம்.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து சினிமாவில் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி, மாயை, விலாஸம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்துள்ள இந்த திரைப்படங்களை விடவும் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பெரும் பரபலத்தை தந்தது.

இத்திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு பல லட்சக் பாலோசகர் கிடைத்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சனம் ஷெட்டி தனது வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாக அடையாறு சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக ஆபாசமான மெசேஜ் வந்த வாட்ஸ் அப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த மெசேஜ் உள்ளிட்ட பலவற்றையும் ஆதாரமாகக் காவல்துறையிடம் வழங்கியுள்ளார். இதனைக் குறித்து அடையாறு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.