நெற்றியில் அழுத்தமான குங்குமம்..! திருமணத்தை ரகசியமாக முடித்து விட்டாரா சனம் ஷெட்டி..?

actress sanam shetty marriage latest news: தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இவர் திரைப்படத்தில் நடித்து பிரபலமானதை விட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானது தான் ஏராளம்.

அந்த வகையில் பிரபல பிக்பாஸ் பிரபலமான தர்ஷனின் காதலியாக கருதப்பட்ட சனம் ஷெட்டி தர்ஷன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும் பிறகாக பிகினி உடையில் ரசிகர் மத்தியில் பேட்டி கொடுத்தது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு இதனைக் காரணமாகக் கொண்டு இவர்கள் இருவருக்குமே பல சண்டை சச்சரவுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.  அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதலுக்கு இதுவே பிரிவாகவும் அமைந்தது.

தற்போது சனம் ஷெட்டியை பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக நியமித்தார்கள் இந்நிலையில் அங்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் மிகவும் நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்து விட்டார்.

ஆனால் விஜய் டிவி சனம் ஷெட்டியை பாதியிலேயே வெளியேற்றி அதன் காரணமாக சமூக வலைத்தளத்தில் விஜய் டிவி எதிர்த்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் சனம் செட்டி செய்ததை பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் இருந்து வருகிறார்கள்.

ஏனெனில் சனம் ஷெட்டியின் நெற்றியில் குங்குமத்தை மிக அழுத்தமாக வைத்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டிக்கு ரகசியமாக திருமணம் முடிந்து விட்டதா என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் கர்நாடகா பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது வழக்கம் தான் என சிலர் ஆதரவாக பேசி வருகிறார்கள்.

sanam-shetty
sanam-shetty
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment