பிரபல முன்னணி நடிகையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகை சமந்தா – யாருடன் தெரியுமா.

samantha
samantha

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா உலகில் சிறப்பான படங்களை கைப்பற்றி நடித்து வெற்றி கண்டு வருகிறார். கடைசியாக அல்லு அர்ஜுன் படமான புஷ்பா படத்தில் “ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு நடனமாடினார் அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு சிறந்த நடிகர்களுடன் கைகோர்த்து படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து யசோதா, சகுந்தலம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். என்னதான் சினிமா உலகில் ஓடினாலும் மீதி நேரங்களில் தனது தோழிகளுடன் பொழுதை ஜாலியாக கழித்து வருகிறார்.

இவர் அன்மையில் கூட தனது தோழிகளுடன் சுற்றுலா சென்று பனி மலைகளுக்கு நடுவே சறுக்கல் விட்டு விளையாண்டது மற்றும் அங்கு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் முக்கிய பிரபலங்கள் மற்றும் தனது தோழிகளுடன் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் வெளிவந்தன.

அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களையும் அள்ளி வீசி அசத்துகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து நடிகை சமந்தா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும் நடிகை சமந்தா வரலட்சுமியுடன் செம உற்சாகமாக இருக்கும்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் இப்படி உற்சாகமாகச் சந்தோசமாக இருக்கிறீர்களா அதுபோலவே எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும் எனக் கூறி புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

samantha
samantha
samantha
samantha