அஜித், விஜய் லெவலுக்கு உயர்ந்த நடிகை சமந்தா – புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..!

0
samantha-
samantha-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. ஆரம்பத்தில் தமிழில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் டாப் ஹீரோக்களின் பட வாய்ப்பு கைப்பற்றினார் அந்த வகையில் நடிகை சமந்தா தளபதி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டார்.

அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது குறிப்பாக தமிழை தாண்டி பிறமொழி பக்கங்களிலும் வாய்ப்புகள் வந்தன அதை சரியாக பயன்படுத்தி தற்போது தென்னிந்திய சினிமாவை தான் கண்ட்ரோலில் வைத்து ஓடிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது கூட நடிகை சமந்தா கையில் யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்கள் இருக்கின்றன.

அதில் முதலாவதாக சமந்தா நடித்த யசோதா திரைப்படம் வெளியாக இருக்கிறது. படம் வருகின்ற 11ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர், போஸ்டர் போன்றவை வெளிவந்து படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவர இன்னும் விரல்விட்டு என்னும் அளவிற்கு இருப்பதால்..

சமந்தா ரசிகர்கள் தற்பொழுது கட்டவுட் பேனர் என அடுத்தடுத்து வைத்து அசத்துகின்றனர் அந்த வகையில் சமந்தாவின் தீவிர ரசிகர்கள் சிலர்  ஹைதராபாத்தில் சமந்தாவிற்கு மிகப்பெரிய ஒரு கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர். அந்த கட்டவுட் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

கட்டவுட்டை  பார்த்த ரசிகர்கள் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்ற நடிகர்களுக்கு மட்டுமே இவ்வளவு பெரிய கட்டவுட் வைப்பது வழக்கம் முதல் முறையாக சமந்தாவுக்கு வைத்துள்ளீர்கள் என கூறி அந்த கட்டவுட் லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ வந்த கட்டவுத்தை நீங்களே பாருங்கள்..

samantha-
samantha-