தீபாவளிக்கு ரிலீசான இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளும் நடிகை சமந்தா!! இவரின் நடிப்பு அவருக்கு ஊக்கமளித்துள்ளதாம். .

actress samantha tweet about this movie she liked and also inspired :நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம்  தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படம் பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்..

இந்த திரைபடத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள் என அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்  நடிகை சமந்தாவும் இந்த படத்தை புகழ்ந்து பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் இந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப்போற்று என்றும் விலையுயர்ந்த மாணிக்கம் போன்றது சுதா கொங்கரா, அபர்ணா போன்றவர்களை பாராட்டி உள்ளார்.

இந்த  திரைப்படம் அவருக்கு ஊக்கம் அளித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment