தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் அண்மையில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.
இந்த படத்தில் சமந்தாவுடன் கைகோர்த்து நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா சகுந்தலம், யசோதா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இது போதாத குறைக்கு சினிமா நேரம் போக போட்டோ ஷூட் எடுத்து அசத்துகிறார். இதனால் நாளுக்கு நாள் சமந்தாவை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 3 கோடி சம்பளம் வாங்குகிறார்.
அண்மை காலமாக சினிமா பிரபலங்கள் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பது குறித்து நாம் பார்த்து வருகிறோம். அதுபோல இப்போ நடிகை சமந்தா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளிவருகின்றன. தோராயமாக சமந்தாவின் சொத்து மதிப்பு சுமார் என்பது கோடி இருக்கும் எனவும் அவருக்கு ஹைதராபாத் மற்றும் பல முக்கிய இடங்களில் சொத்துக்கள் இருக்கிறதாம்.
மேலும் வெகு விரைவிலேயே மும்பையில் ஒரு புதிய விட்டை வாங்கி தங்க இருக்கிறார். நடிகை சமந்தாவுக்கு சொந்தமாக மூன்று கார்கள் இருக்கிறது. அதில் பிஎம்டபிள்யூ, ஜாகுவார் போன்ற சொகுசு கார்களும் அடங்கும்.