அட சமந்தா அணிந்து வந்த இந்த கருப்பு புடவை எத்தனை லட்சம் தெரியுமா.? வாய் பிளக்கும் நெட்டிசன்கள்..

Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் நிலையில் அங்கு 41வது இந்திய பேரணி நடைபெற்றது அதில் கருப்பு நிற புடவை அணிந்து கலந்துக் கொண்டுள்ளார் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அந்த புடவையின் விலை குறித்து கேட்டதும் ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

நடிகை சமந்தா தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் மயோசிடிஸ் சென்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே சில மாதங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்த சமந்தா பிறகு குஷி படத்தின் படப்பிடிப்புகளில் கலந்துக் கொண்டார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நடைபெற்ற முடிந்திருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

samantha

குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவின் பொழுது விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் மேடையில் ரொமான்டிக் நடனமாடி ரசிகர்களை இன்ப அதிர்ச்சிப்படுத்தினார்.

samantha 1

இதனை அடுத்து மீண்டும் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருக்கும் சமந்தா நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற இந்திய பேரணியில் கருப்பு நிற புடவையில் கலந்து கொண்டார் இந்த புடவையின் விலை சுமார் 1.38 லட்சம் ரூபாயாம்.

samantha 3

இதனைக் கேட்டவுடன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைய அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமந்தாவின் க்யூட் புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வரும் நிலையில் இதோ அந்த புகைப்படங்கள்.

samantha

Leave a Comment

Exit mobile version