நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் வதந்திகள்..! நியாயம் கேட்க நீதிமன்றம் செல்ல தயாரான நடிகை சமந்தா..!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவர் சமீபத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து நயன்தாராவும் மற்றொரு கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது மட்டும் இல்லாமல் இத்திரைப்படத்தை நயன்தாராவின் ஆசைக் காதலன் விக்னேஷ்வர் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

ஒரு பக்கம் சினிமாவில் தொடர் வெற்றியை கண்டு வரும் நடிகை சமந்தா தன்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வியை பார்த்து வருவதாக சமூக வலைதள பக்கத்தில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த  அடை பெயரை தூக்கிவிட்டு s என வைத்தது அவருடைய கணவர் நாகசைதன்யா விற்கும் சமந்தாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகி விட்டது.

இதனை தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில்  செய்திகளை நாயுடன் ஒப்பிட்டு பதிலடி கொடுத்தது மட்டுமில்லாமல் வெறி பிடித்த நாய் போல் சமூகவலைதளத்தில் தன்னுடைய விவாகரத்து பற்றிய செய்தி பரவி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

என்னதான் சமந்தா  எதிர்த்துப் பேசி இருந்தாலும் இவருடைய விவாகரத்து பற்றி  செய்தியாளர்கள் பல்வேறு வதந்திகளை வெளியிட்டு தான் வருகிறார்கள்.  அந்த வகையில் நாக சைதன்யா சினிமா வாழ்க்கை வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு நான் வீட்டிற்கு வந்தால் சினிமாவை பற்றி பேசவே மாட்டேன் அதை தான் என் குடும்பத்தாரும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

samantha
samantha

மேலும் சமந்தாவுக்கும் நாகசைதன்யா விற்கும் இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் தொடர்ந்து விவாகரத்து பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதன் காரணமாக இதனை பற்றி நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண இருப்பதாக கூறியுள்ளார்.