தொடர் ஹிட் படங்கள் காரணமாக சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா.? ஷாக்கான தென்னிந்திய சினிமா.

samanatha
samanatha

தமிழ் சினிமாவில் பல டாப் நட்சத்திர நடிகைகள் இருந்தாலும் அவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்து தற்போது அசுர வளர்ச்சியை நோக்கி ஓடி கொண்டிருப்பவர் நடிகை சமந்தா ஆரம்பத்தில் சிறப்பான திரைப்படங்களை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் இவருக்கு தென்னிந்திய திரை உலகம் முழுவதும் வாய்ப்புகள் குவிந்தது.

அதை சரியாக பயன்படுத்தி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்து ஹிட் படங்களை கொடுத்து அதன் விளைவாக தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக விஸ்வரூபம் எடுத்து உள்ளார் சமந்தா. இவர் சமீபகாலமாக தமிழ் சினிமா பக்கம் பெரிய அளவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது இந்த படத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா இவருடன் இவர் நடிக்கின்றனர் என்பது கூடுதல் தகவல் இது போதாத குறைக்கு தெலுங்கிலும் சகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் இப்படி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓடிக் கொண்டிருந்த இவர் சமீபத்தில் ஹிந்தியில் உருவான ஃபேமிலி வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து இருந்தார் இது எதிர்பாராத அளவிற்கு வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் இருக்கின்றன அடுத்த படத்திலும் இவர் நடிப்பதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

மேலும் அட்லி ஷாருக்கானுடன் இணைந்து உள்ள படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தாவை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வெற்றி நாயகியாக வலம் வருவதால் தற்போது அவர் தனது சம்பளத்தை உயர்த்த ரெடியாக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு புதிய படத்திற்கு 4 கோடி சம்பளம் கேட்க இருக்கிறாராம். விவாகரத்து பெற்ற பிறகு தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு தற்பொழுது சினிமாவில் பயணிக்க ரெடியாக இருக்கிறார் சமந்தா. இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் பலரும் தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.