நயன்தாராவை தள்ளிவிட்டு சிம்மாசனத்தில் உட்கார்ந்த பிரபல நடிகை..! சொலமுத்தான் போச்சா..!

actress samantha overtaking to nayanthara: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவரை லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்டு சொல்லப்பனால் தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகை யார் என்றால் நடிகை நயன்தாரா பெயரை தான் அனைவரும் சொல்வார்கள்.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் பிரபல நிறுவனங்கள் டாப் 10 நடிகைகளை வரிசைப்படுத்தி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 2020 ஆண்டின் top 10 நடிகைகளின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது

அந்த பட்டியலை பல்வேறு நிறுவனங்களும் தற்போது வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் தற்போது மும்பையில் உள்ள மிகப்பிரபலமான ஆர் மேக்ஸ் என்ற நிறுவனமானது நடிகைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளார்கள்.

அந்த லிஸ்டில் நடிகை நயன்தாராவை பிரபல நடிகை ஒருவர் மிஞ்சி உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போய் உள்ளார்கள்.ஏனெனில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா இவரையே ஒருவர் மிஞ்சி விட்டார் என்றால் அது ஒரு ஆச்சரியமான செய்திதான்.

அவர் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகை சமந்தா தான்.  இவர் சமீபத்தில் தான் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன்னான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்ட நேரமோ என்னவோ தெரியவில்லை. கையில் பிடிக்க முடியாத அளவிற்கு உயரத்திற்கு சென்று விட்டார்.

நடிகை நயன்தாரா தமிழில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டி இருந்தாலும். தெலுங்கில் அவரால் பிரபலமாக முடியவில்லை. இதனால் நடிகை நயன்தாரா தெலுங்கில் நம்பர் 10வது இடத்தில் உள்ளாராம். ஆனால் நடிகை சமந்தா தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் செம மாஸ் காட்டி உள்ளார்.இதனால் நடிகை நயன்தாராவை விட சமந்தா முன்னிலையில் இருக்கிறார்.

samantha
samantha

Leave a Comment