தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்பொழுது ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்துள்ளார் கடந்த சில மாதங்களாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட உள்ளார். இதன் காரணமாக பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சமந்தா சமீப காலங்களாக அதிலிருந்து மீண்டு வருகிறார்.
சமந்தா நடிப்பில் சில படங்கள் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் அதனை சமந்தாவால் கொண்டாட மட்டும் கூட முடியவில்லை அந்த அளவிற்கு அவதிப்பட்டார் மேலும் அனைவரும் சமந்தாவுடைய சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என நினைத்து வந்த நிலையில் தொடர்ந்து இவருக்கு கிடைத்த ஏராளமான வாய்ப்புகள் பரிபோனது இதனால் பல கோடி நஷ்டத்தை சந்தித்தார்.
இந்நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் யசோதா. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது மிகவும் ஒல்லியாக இருந்தார் அதோடு மட்டுமல்லாமல் மேடையில் இவரை பற்றி பேசி தொடங்கியவுடன் அழுதுவிட்டார்.
மேலும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இவருடைய சகுந்தலம் திரைப்படம் இந்த மாதம் 17ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது எனவே ரசிகர்கள் முகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். விரைவில் சமந்தா இந்த நோயிலிருந்து மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் காத்து வந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஜிம்மில் கடின ஒர்க்கவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் நடிகை சமந்தா புதிதாக நடிக்க இருக்கும் Citadel என்ற வெப்சீரிஸில் நடிக்க இருக்கிறார் எனவே அந்த வெப்சைடேசன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது இதில் செம ஸ்டைலாக மிகவும் மாசாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இந்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இந்த வெப் சீரியலை ராஜ் மற்றும் டிகே இயக்குகிறார்கள் இவர்களுடைய இயக்கத்தில் இதற்கு முன்பு தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.