புதிய லுக்கில் கவர்ச்சியில் கலக்கும் நடிகை சமந்தா.! கம்பேக் புகைப்படங்களை பார்த்து மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது உடல்நல பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை சமந்தா தற்பொழுது படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறார். மேலும் இதனை அடுத்து உடற்பயிற்சியையும் செய்துவரும் நிலையில் மறுபுறம் போட்டோஷூட் நடத்தி அதனை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்பொழுது நீண்ட நாட்கள் கழித்து போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக யசோதா, காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இந்த படங்களில் சமந்தாவின் கதாபாத்திரங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனை அடுத்து இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிட்டாடல் வெப் சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

மேலும் புராண கதையை மையமாக வைத்து இவருடைய நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சாகுந்தலம் படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே தற்பொழுது படக்குழுவினர்கள் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் தீவிரம் காமித்து வருகிறார்கள். மேலும் விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கடைப்பிடிப்பில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

samantha
samantha

இவ்வாறு தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பிசியாக இருந்து வரும் நடிகை சமந்தா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது வித்தியாசமான ஓவர் கோட் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் ஹோலிவுட் மாடலில் இருப்பதாக கூறி வருகின்றனர்.

samantha 1
samantha 1

இவ்வாறு சமந்தா சில மாதங்களாக உடல் பாதிப்பு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டார் மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட இவர் தன்னை அறியாமல் அழுதார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் மாடன் உடை மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Comment