புதிய புகைப்படத்தை வெளியிட்டு 12 வது வருஷத்தை கொண்டாடும் நடிகை சமந்தா – வாழ்த்தும் ரசிகர்கள்.

samantha-
samantha-

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து சிறப்பான கதைகளில் நடித்து வருவதால் நாளுக்கு நாள் நடிகை சமந்தாவின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே இருக்கிறது. சினிமாவுலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருந்தாலும் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

இதனால் நாளுக்கு நாள்  முன்னேறுகிறார். அதற்கு ஏற்றார் போல தனது எண்ணங்களையும் மாற்றுக் கொண்டு ஒரு பக்கம் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் டாப் நடிகர்கள் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியும் அசத்துகிறார் அப்படி புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து நடிகை சமந்தா  ஒ சொல்றியா மாமா பாடலுக்கு தம்மாத்துண்டு ட்ரஸை   போட்டுக்கொண்டு நடனமாடி அசத்தினார்.

அது அவரது மார்க்கெட்டை இன்னும் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது மேலும் தெலுங்கில் தற்போது பல்வேறு பட வாய்ப்புகளை கைப்பற்றி உள்ளார் அந்த வகையில் நடிகை சமந்தா சகுந்தலம், யசோதா ஆகிய பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடிக்கிறார் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா தமிழ் தெலுங்கையும் தாண்டி பல்வேறு மொழிகளிலும் நடித்து  அசத்தி வருகிறார் ஆனால் சினிமா உலகில் இப்போது வந்தது போல் தான் இருக்கிறது ஆனால் இவர் சினிமா உலகில் நுழைந்த தற்போது 12 வருடங்கள் ஆகிவிட்டதாம் இதனை அவரே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

12 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியீட்டு  இந்த திரைப்பயணம் என்றும் எனது ரசிகர்களுக்கு நன்றி உணர்வுடன் இருப்பேன். சினிமா உலகில் அது காதல் கதை ஒரு பொழுதும் முடிவு கிடையாது என்றும் அது என்னை பலமாக என்றும் வைத்திருக்கும் என்று நான் நம்புவதாக தெரிவித்தார்.