தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நமது நடிகை தற்பொழுது படிப்படியாக நயன்தாராவின் இடத்தை ஆக்கிரமித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நமது நடிகை பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். மேலும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த திருமண வாழ்க்கையை அவர்கள் முடித்துக் கொண்டார்கள்.
இவ்வாறு வெளிவந்த தகவலின் மூலமாக ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பது மட்டுமில்லாமல். அவர்கள் இருவரும் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் அவரவர் தங்களுடைய திரைப்பட பாடம் படிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் தற்போது இவர்கள் இருவருமே பல திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காபி வித் கரண் என்ற எபிசோடில் நடிகை சமந்தா அவர்கள் கலந்து கொண்டார் அப்பொழுது தன்னுடைய முன்னாள் கணவர் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்துள்ளார். அப்போது ஜீவனாம்சமாக சமந்தாவுக்கு 50 கோடி ரூபாயை நாகசரதன்யா கொடுக்க முன் வந்ததாகவும் அதனை சமந்தா மறுத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சமந்தா தற்பொழுது புது வீடு ஒன்றை வாங்கி உள்ளார் அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது மட்டுமில்லாமல் வைரலாக பரவி வந்தது. அதுமட்டுமில்லாமல் விவாகரத்துக்கு முன்பாக நடிகை சமந்தா அவர்கள் நாக சைத்தானவுடன் இணைந்து ஹைதராபாத்தில் தனி வீடு ஒன்று வாங்கி உள்ளார்.
ஆனால் இவர்கள் இருவரும் பிரிந்தவுடன் அந்த வீட்டை விட்டு விட்டார்கள் தற்போது பல முயற்சிகளை மேற்கொண்டு அதே வீட்டை 22 கோடி கொடுத்து சமந்தா அவர்கள் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவ்வாறு வெளிவந்த தகவலின் படி சமந்தாவுக்கு தனது முன்னாள் கணவன் நினைவு வந்துவிட்டதோ என பலரும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.