தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருபவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலமடைந்தார். மேலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.
தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கி வரும் நடிகைகளில் சமந்தா முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு கடந்த நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவிலும் வருத்தமான டுவிட்டுகளை வெளியிட்டு வந்த இவர் பிறகு ஓரளவிற்கு தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இதுவரையிலும் கவர்ச்சியாக எந்த ஒரு திரைப்படத்திலுமே நடிக்காமல் இருந்து வந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தில் இவர் ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றேன் பாடலுக்கு நடனமாடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதன் பிறகு சில வெப் சீரியல்களிலும் இவ்வாறு நடித்து இருந்த நிலையில் தற்போது இவர் சகுந்தலம், யசோதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவ்வாறு பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் படும் மோசமான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடித்துவரும் இவர் பாலிவுட்டில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய குமாருடன் இணைந்து சமீபத்தில் புது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் அக்ஷய்குமார் உடன் இணைந்து இவர் ஓஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
Our Stunning @Samanthaprabhu2 & Khiladi @akshaykumar Grooving On #OoAntavaOoOoAntava! 🔥😍#HotstarSpecials #KoffeeWithKaranS7 Eps 3 starts streaming on 21st July. #Samantha #AkshayKumar#SamanthaRuthPrabhu pic.twitter.com/5lcL6xItFd
— Troll Who Trolls Samantha™ (@TeamTWTS) July 20, 2022