நெகட்டிவ் ரோல்!! ஆக்ஷன் காட்சி என நடித்து மிரட்டும் சமந்தா! பாராட்டும் இயக்குனர்கள்..

actress samantha acting in negative role: நடிகை சமந்தா தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு போன்ற பிற மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் நடித்துள்ளார்.

மேலும் இவருடன் மனோஜ் பாஜ்பாய்,  பிரியாமணி, நிராஜ் மாதவ் போன்ற பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவிற்கு நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆக்ஷன் காட்சிகளில் மிக தத்ரூபமாக நடித்து மிரட்டி உள்ளதாகவும் இயக்குனர் கூறியுள்ளார். அதற்காக இவர் தனியாக பயிற்சி மேற்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் இந்த மாதம் இறுதியில் வெளியிட இருந்த நிலையில் தற்போது பிப்ரவரி மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version