ஒரே நேரத்தில் மூன்று பேரை காதலித்தேன்.! அதில் ஒருத்தர் இப்பொழுது பிரபல நடிகர்.. பல உண்மைகளை உடைத்த நடிகை ஷகீலா

0
shakila
shakila

தென்னிந்திய சினிமாவில் 80 காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக பிரபலமானவர்தான் நடிகை ஷகீலா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஷகீலா தொடர்ந்து கவர்ச்சி திரைப்படங்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஷகீலா என்றாலே கவர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் தான் மக்கள் அவரைப் பார்த்து வருகிறார்கள். மேலும் அது போன்ற பல புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இவருடைய வாழ்க்கையே இதனால் பாதிக்கப்பட்டது இதன் காரணமாக தற்பொழுது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவ்வாறு மக்கள் மத்தியில் கவர்ச்சி நடிகை என்ற கண்ணோட்டத்தில் இருந்து வந்த ஷகீலாவை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்தமாக மாற்றியது. சமையல் பொட்டியாக இருந்தாலும் இந்நிகழ்ச்சியில் புகழ் இவரை அம்மா அம்மா என கூறி தற்பொழுது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களும் அவரை ஷகீலா அம்மா என தான் கூறி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல யூடுயூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நிலையில் அதில் அவர் எனக்கு 10 வயசுல ஒரு காதல் இருந்தது அவருடைய வாழ்க்கை என்னால தான் போச்சு.. நான் அப்போது ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று காதல் செய்தேன் அப்போ எனக்கு காதல்னா என்னானே தெரியாது.

இன்னொருவர் இப்போது நடிகராக இருக்கிறார் அவருக்கு இன்னைக்கு வரைக்கும் கல்யாணம் ஆகல.. என்ன படுத்தினால அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. அதுக்கப்புறம் இன்னொருத்தருக்கு இப்பொழுது கல்யாணமாகி உள்ளது ஆனால் அவர் மாட்டிக்கிட்டு இருக்காரு பாரு ஒருத்திக்கிட்ட.. கொடுமையிலும் கொடுமையா அவருடைய மனைவி வந்து அமைந்திருக்கு.

சட்னியில் ஒரு மிளகாய் அதிகமாய் போட்டதுக்கு அவன் சட்னியை தள்ளி விட்டான். இன்னைக்கு அவன் மனைவி சரியா சமைக்கலன்னு என்கிட்ட வந்து புலம்பு கிட்டு இருக்கான் நான் பத்து வருஷம் காதலிச்சவர் தான் விட்டுட்டு போன சில மாதங்களில் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். அப்போ அவன் காதல் எந்த வகையில் தான் இருந்தது.. இவங்க எல்லாரும் ஒவ்வொரு வகையில் என்னை கஷ்டப்படுத்தி இருக்காங்க.. இவங்க எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் நான் உதவி செய்திருக்கேன்.. என்றார்.